திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தவம் / Penance   

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.



தனது உயிரே தனக்கு அறம் செய்ய வல்லதாய் பெற்றவரை மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும்.



தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.



தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.



தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.


Who gains himself in utter self-control,
Him worships every other living soul.


All other creatures will worship him who has attained the control of his own soul.



thannuyir thaan-aRap petraanai Enaiya
mannuyi rellaanh thozhum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தனது துன்பத்தை நீக்கி அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம். இதை அனைவரும் சாதிப்பது இயலாது. தவம் செய்பவர்க்கு உதவ பலர் தவம் செய்வதை தவிர்கிறார்கள். தகுதியானவர்களை தக்க வைக்க தவத்தால் இயலும். தன் உயிரை தெளிவாக அறிந்தவரை மற்றய உயிர்கள் போற்றும். காலனும் தன் கடமை செய்ய அஞ்சுவான் சிலராக இருக்கும் தவம் செய்பவரை கண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.