பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: புலான்மறுத்தல் / Abstinence from Flesh
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
உயிர்களை கொல்லாதவரையும் புலன்களை மறுத்தவர்களையும் எல்லா உயிரும் போற்றி வணங்கும்.
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
kollaan pulaalai maRuththaanaik kaikooppi
ellaa uyirunh thozhum
உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு அருளை வளப்பதே அவசியம். உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும், பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும். உணவின் சுவை படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது. உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை. உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள். புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.