திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அருளுடைமை / Compassion

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.



அருள் அடைந்த மனம் படைத்தவருக்கு இல்லை இருளோடு இருக்கும் துன்பமான உலகத்தில் புகுவது.



அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.



அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.



அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.


They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.


They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.



aruLsaerndha nenjinaark killai iruLsaerndha
innaa ulakam pukal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அருள் என்ற செல்வமே செல்வம் பொருள் மூடர் இடத்திலும் இருக்கும். பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள் என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு மேல் உலகம் என்ற இன்பமான வாழ்வு மலரும். அருள் அற்றவர் செய்யும் உதவி வீணான முயற்ச்சி. வலிமையானவர் முன் தன் நிலை எண்ணி உணர்ந்தவர் பிறரை ஏளனமாக பார்ப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.