திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஈகை / Giving

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.



பார்த்து உன்ன மறுப்பவனை ( பகிர்ந்து உன்ன நினைப்பவனை) பசி என்ற தீய நோய் தீண்டுவது கடினம்.



தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.



பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.



பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.


Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.


The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.



paaththooN maree-i yavanaip pasiyennum
theeppiNi theeNdal aridhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இல்லை என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும். நல்ல ஆறு என்றாலும் முழ்கினால் மரணிப்போம் சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு. நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள். ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல். பகிர்ந்து உண்பவற்கு பசிக் கொடிமை வராது. கொடுக்க முடிய சுழலைவிட மரணம் இனிமையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.