பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: ஒப்புரவறிதல் / Duty to Society
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
ஊக்கமுடன் கொடுத்த பொருள்கள் யாவும் தகுதியுடையவருக்கு உபகாரம் செய்திட வேண்டியே.
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
thaalaatrith thandha poruLellaam thakkaarkku
vaeLaaNmai seydhaR poruttu
எதிர்பார்ப்பு இல்லாத மழைப் போல் உதவிட முனைதல் வேண்டும். தகுதியானவற்கு உதவுதல் போன்ற சிறந்த செயல் இல்லை. இடர்பட்ட காலத்திலும் உதவும் ஒருவர் காணக்கூடிய தெய்வம். யாவரும் வாழ நினைக்கும் நல்ல மனிதர்கள் மட்டுமே உயிர் வாழும் மனிதர்கள் மற்றவர்கள் இறந்தவர்கள் கணக்கில் வைக்க வேண்டும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.