பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: தீவினையச்சம் / Dread of Evil Deeds
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
அறியவேண்டியதில் எல்லாம் முதன்மையானது தீயதை செய்தவர்க்கும் செய்யாது விடுவது.
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
To do no evil to enemies will be called the chief of all virtues.
aRivinuL ellaanh thalaiyenpa theeya
seRuvaarkkum seyyaa vidal
வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல் போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர் வீடுபெறு பெற நினைப்பவர் தீமை செய்யாது விலக வேண்டும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.