திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புறங்கூறாமை / Not Backbiting

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.



குறை சொல்லி உறவை பிரிப்பார்கள் நிறை சொல்லி நட்பை வளர்க்க இயலாதவர்கள்.



மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.



கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.



இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.


With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.


Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.



pakachchollik kaeLirp pirippar nakachcholli
natpaatal thaetraa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமற்று தேவையற்றதை செய்பரும் புறங்கூறாது இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பது நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியா வார்த்தை சொன்னாலும் பரவயில்லை பின்னாக புறம் பேசாதே. தன் குற்றத்தை நிக்க முயல்பவர் பிறரை புறம் செய்யமாட்டார். யாரோ ஓருவர் குற்றம் போல் தன் குற்றத்தை ஆராய்ந்து திருத்தினால் துன்பம் என்பது இல்லாமல் போகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.