திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: புறங்கூறாமை / Not Backbiting
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.