பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: வெஃகாமை / Not Coveting
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
அழியாமை செல்வத்திற்கு எதுவென்றால், வேட்கை கொள்ளாமை வேண்டும் பிறர் பயன்படுத்தும் பொருளின் மீது.
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!.
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
aqkaamai selvaththiRku yaadhenin veqkaamai
vaeNtum piran-kaip poruL
நடுநிலையற்ற வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும் அடுத்தவரின் பொருள் மேல் ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட வேண்டாம் என்ற செருக்கு இன்பம் தரும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.