பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: அழுக்காறாமை / Not Envying
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
அழுக்கு மனம் அற்றவரை உலகம் அகற்றிவிடுவது இல்லை,அழுக்கு மனம் உள்ளவர் எவ்வளவு அடைந்தாலும் நிறைவடைவது இல்லை.
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
azhukkatru akandraarum illai aqdhuillaar
perukkaththil theerndhaarum il
பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர், பகைவர் தரும் அழிவைவிட பொறாமை தந்துவிடும். பொறமையுள்ளவர் பிறவி மூப்பே. பொருள்களினால் நிறைவோ அடையமாட்டார்கள்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.