திருவள்ளுவரின் திருக்குறள்

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.



துறவியை விட தூய்மையானவர் தீய சொற்களை பேசுபவரை இறந்தவர் வாய் பேச்சி என்று பார்பவர்.



வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.



நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.



எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்


They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.


Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.



thuRandhaarin thooimai udaiyar iRandhaarvaai
innaachchol noRkiR pavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறுத்துக் கொள்ளும் பண்பு அவசியம் தன்னை வேட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவ பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார் மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத் தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.