பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: பிறனில் விழையாமை / Not coveting another's Wife
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
நலமுடன் இருக்க உரியவர் யாரென்றால் தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு தரதாவர்.
அடுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை. பகை பாவம் பழி பயமற்றவர் இல்லறத்தார் ஆவர். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வை சிதைக்க காரணமாக இருக்க மாட்டார்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.