பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: பிறனில் விழையாமை / Not coveting another's Wife
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பகை பாவம் பயம் பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும் இல்லறத்தை துறந்தவன் இடத்தில்.
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife
pakaipaavam achcham pazhiyena naankum
ikavaavaam illirappaan kaN
அடுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை. பகை பாவம் பழி பயமற்றவர் இல்லறத்தார் ஆவர். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வை சிதைக்க காரணமாக இருக்க மாட்டார்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.