திருவள்ளுவரின் திருக்குறள்

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.



ஒழுக்கமானவர்கள் தீமையானவற்றை தவறியும் வாயில் கூட சொல்லுவது இல்லை.



தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.



மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.



தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.


It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill


Those who study propriety of conduct will not speak evil, even forgetfully



ozhukka mutaiyavarkku ollaavae theeya
vazhukkiyum vaayaaR solal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம் அது வீடுபெறு அடைய உதவும் என்பதால் உயிரைவிட போற்றவேண்டும். ஒழுகத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லெழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும் உலகத்துடன் ஒத்திசையும் படி நடப்பவர் கற்று அறிந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.