திருவள்ளுவரின் திருக்குறள்

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.



உண்பதிலும் உண்டது செரித்தல் இனிமையானது காமம் புணர்வதிலும் ஊடல் இனிமையானது.



உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.



உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.



உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.


'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.


To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.



unalinum undadhu aral-inidhu kaamam
punardhalin oodal inidhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தவறே செய்யாத பொழுதும் பிணங்குவது இன்பம்தர வல்லமை உள்ளதாக இருக்கிறது. பிணங்குவது சிறிய துன்பம் தந்தாலும் நல்ல பயனை தரும். புணர்ந்து மகிழ்ந்தவர் புதிய ஒன்றை நாடமுடியாது காரணம் அவர்கள் நிலத்தின் தன்மை அடைந்த நீர் போல் இணைந்த அகத்தை பெறுகிறார்கள். கூடி மகிழ்வதே அதிகபடியான கூடி மகிழ ஊக்குவிக்கும் இதிவே உள்ளத்து நாணத்தினை அழிக்கும். தவறு செய்யாமலேயே ஆறுதலாக தோள் தழுவுதலில் சுகம் இருக்கிறது. செரித்தபின் உண்ணுவது இனிமையானது அது போல் ஊடலுக்கு பின் காமம் இனிமையானது. ஊடலில் தோற்றவரே வேற்றி பெற்றவர் அதை கூடி மகிழ்வதில் அறியலாம். ஊடலின் சிறப்பு கூடி மகிழ்ந்து நெற்றி வியர்வையின் வந்த உப்பால் அறியலாம். ஊடலே இரவின் நீளத்தை அதிகமாக்கும். ஊடுவதே காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்வது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.