திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: ஊடலுவகை / The Pleasures of Temporary Variance
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.