பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: புலவி நுணுக்கம் / Feigned Anger
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
பாராட்டி தான்படும் இன்னலை உணர்த்தினாலும் வறுந்தும், பிறரையும் இப்படித்தான் சமாதானம் செய்கிறீர் என்று.
பெண்ணும் பெண்தன்மை கொண்டவரும் உன் பரந்த மார்பு மேல் பார்வை செலுத்துவதால் அதை நாட மறுக்கிறேன். நீடு வாழ்க என வாழ்த்துவேன் என்று ஊடலாக இருக்கும் பொழுது தும்மினார். புது மலர் சூடி இருந்தால் யாரை எண்ணிச் சூடினீர் என்கிறாள். உன்னிலும் அழகி யாரும் இல்லை என்றாலும் யாருடன் ஒப்புமை செய்கிறீர் என்று கேட்கிறாள். இப் பிறவியில் உன்னை பிரியேன் என்றாலும் கண்ணிர் வழிய வாடினாள் அடுத்த பிறவிக்கு ஆள் கிடைத்ததோ என்பதைப் போல். நினைத்தேன் என்றதும் மறத்தீரோ என்று விலகினாள். தும்பினேன் வாழ்த்தினாள் மறுகணமே யாரை எண்ணி தும்மினீர் என்கிறாள் சரி அடக்கினேன் அதற்கும் அறியாதபடி மறைக்க முயல்கிறாய் என்கிறாள். அவளது நற்செயலை பாராட்டினாலும் வறுந்துகிறாள் இப்படித்தான் அடுத்தவளையும் தேற்றுகிறாயா என்று. அவளையே நினைத்தபடி பார்பினும் வருந்துகிறாள் யாரை நினைத்து என்னை பார்க்கிறாய் என்று.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.