பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: புலவி / Pouting
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
தழுவாமல் இரு அவர் உடலை அவர் அடையும் துன்ப நோய் காணலாம் சிறிது.
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.
Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove.
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
pullaa thiraaap pulaththai avar-urum
allalnoai kaankam siridhu
புணராது இருந்து அதன் வேதனை அறியலாம் சிறிது. உப்பு போல் அளவாக அனுமதிக்கலாம் பிணக்கை. பிணக்கு அளவுக்கு அதிகமானால் புணர்தல் நிகழாது. ஊடலை உணராமல் இருந்தால் வேறுடன் பிடிக்கிய செடி போல் ஆகிவிடும். அடுத்தவர் நலத்தை விரும்பும் மலர்ந்த கண் உடையவர் ஊடலை அகத்தே மட்டுமே வெளிப்பட்டு மறையும். பிரிவும் ஊடலும் இல்லாத காமம் காயும் கனியும் இல்லாததைப் போன்றது. ஊடலுக்கு தடுப்பாக அமைவது கூடுவது குறையும் என்ற நினைப்பு. வருத்தமடைய யார் காரணம் என்று அறியாம காதலரை மாற்றும் வழி இல்லை. நிழலில் இருக்கும் நீர் போல் விருப்பமானவர்களின் பிணக்கும் இருக்கும். ஊடலை மாற்ற அறியாதவரை கூடி மகிழ்வோம் என்பது அளவற்ற என் ஆசை.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.