பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: நெஞ்சொடுபுலத்தல் / Expostulation with Oneself
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
வெட்கத்தையும் மறந்தேன் அவரை மறக்காத என் மாறாத மடத்தனமான நெஞ்சத்துடன் சேர்ந்து.
நெஞ்சே அவர் காதல் எண்ணம் புரிந்த பின்னும் ஏன் கவலை கொள்கிறாய். உறவு பாராட்டதவர் என்றாலும் அவரையை நாடுவது எனோ என் நெஞ்சே. கெட்டுப் போனவர்களை நாடக்கூடியவர்கள் இல்லை என்றா என்னை விட்டு அவர் பின் செல்கிறாய் என் நெஞ்சே உன்னை இனி யார் ஏற்பார் துன்பம் ஏற்று இன்பம் மறுக்கிறாயே. உறவாடவில்லை என்றாலும் அஞ்சுகிறாய் உறவாடும் பொழுது பிரிவை எண்ணி அஞ்சி தீராத துன்பத்தை தருகிறாய். தனிமையிலும் வாட்டுகிறாய். நாணமும் மறந்தேன் நெஞ்சே உன் செயலால். அவர் திறமையை கூட எண்ணி சிரிக்காமல் என்னுள் அசைபோடுகிறேன். துன்பத்திற்கு யார் துணை வருவார் என் நெஞ்சே நீயே எனக்கு துணை இல்லை என்றால் அடைக்கலம் யார் தருவார்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.