பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: குறிப்பறிவுறுத்தல் / The Reading of the Signs
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
நேற்றுதான் சென்றார் எம் காதலர் எனோ ஏழு நாள் போல் மேனி பசந்தது.
மறைத்தாலும் கைவிலகி காட்டுயது போல் கண் காட்டும் பொருள் ஒன்று உண்டு. கண் நிறைந்த நீர்மை நிறைவடைதல் என்பதை உணர்த்தும் அது பெண்மையின் இளமைத் தன்மையை போன்றது. கோர்க்கப்பட்ட மணிக்கு ஆதாரமான நூல் போல் பெண்ணின் அணிகலன்களுக்கு ஆதாரமான ஒன்று உண்டு. மலர துடிக்கும் மொட்டுக்குள் உள்ளதைப் போல் இளம் பெண்ணின் சிரிப்புள்ளும் ஒன்று உண்டு. நான் உற்ற துயரத்தை அழிக்கும் மருந்து அவளது அழகான வளையல்களில் உள்ளது. அரிதாக ஏற்படும் அன்பற்ற சூழல் பெரிதாக செயல்பட்டு இனிமையாக கூடினால் கலைந்துவிடும். குளிர்ச்சிக்கு வழிகாட்டிய அவரின் பிரிவை முன்பே அறிகின்றன வளையல்கள். ஒரு நாள் பிரிவு ஏழு நாள் போல் மேனி பசக்கிறது. அவளது ஆற்றாமையை வளையல் மற்றும் தோளுடன் பாதம் பார்த்து உணர்த்தினாள். பெண்ணின் பெண்மை பெருமைக்கு உரியது என்பேன் கண்ணில் காமநோய் இரவில் உண்டாக்குவதால்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.