திருவள்ளுவரின் திருக்குறள்

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.



தழுவிக் கொள்வேன் ஊடுதலும் செய்வேனோ கூடி மகிழ்வேன் கண் போல் உறவு கொண்ட வீரனை.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மங்கிய வாள் போல் ஒளி இழந்தன கண்கள் மெலிந்து போயின கைகள் நாம் பிரிந்த நாட்களை எண்ணி. தோள்களும் இளைத்து இளம்பிள்ளை தோள் போல் ஆனது. உள்ளத்து உறுதியை துணையாக கொண்டவர் என்பதால் வரவுக்காக காத்திருக்கிறேன். படர்ந்த கொடி கொம்பை மீறுவது போல் காமம் எல்லை கடக்கிறது அவரது வருகையை எண்ணி. வருகையை கண்டபின் தோளில் படந்த பசலையும் மனதின் நோயும் மறைந்துவிடும். தழுவிக் கொண்டு ஊடுதல் செய்து கூடி மகிழ்வேன் கண் போன்ற என் காதலனை. வேலை முடிந்த வருவார் என மாலை விருந்துடன் காத்திருக்கிறேன். ஒருநாள் ஏழு நாட்கள் போல் கடக்கும் பிரிந்தவர் வரவுக்கு காத்திருப்பவற்கு. எல்லாம் இருந்தும் பயன் இல்லை இப்பொழுது உள்ளம் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லை என்றால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.