திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நிறையழிதல் / Reserve Overcome

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.



கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிறையான நாணம் என்ற கதவு உடைபடும் காமம் கணிந்தால், காமம் கண்ணில் நிறைந்து இரவும் பகலுமாய் நெஞ்சை ஆள்கிறது. காமம் தும்மல் போல் தோன்றுவதால் மறைக்க இயலவில்லை. நிறையானவன் என்றே இருந்தேன் இறையான அவன் மேல் கொண்ட காமம் மறைக்கமுடியாமல் பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது. அவன்(இறை) என்னை மறந்து விலகினாலும் அவன் மேல் உள்ள காமத்தால் பெருந்தகமை இல்லாமல் போயிற்று. நம்மை காக்கும் இறை மேல் காமம் நாணம் என்ற ஒன்றை இல்லாமல் செய்திடும். பலவிதமான மாயத்தை செய்யும் கள்வனான இறைவன் பணிவாக பேசியே வார்த்தையாகிய நாதம் அன்றோ நம் பெண்மை என்ற அச்சம் உடைக்கும் படை. யோகம் என்ற புணர்தல் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு. கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சி உடைய பக்தனுக்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.