பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: நெஞ்சொடுகிளத்தல் / Soliloquy
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
பரிவுடன் இணைந்து இருக்காதவர் என்றாலும் ஏங்கிப் பிரிந்தவர் பின் செல்கின்றாயே பேதை என் நெஞ்சே.
யோசனை செய்து சொல் என் நெஞ்சே காம நோய் தீர்க்கும் மருந்து எது. காதலிக்காத அவரை மறக்காமல் இருக்கும் என் நெஞ்சே நீ வாழ்க. அவரை நினைத்தபடி இருக்கும் உனக்கு அவர் மறந்தபடி இருப்பது தெரிந்தும் சிறுமைபட்டு இருக்கிறாயே. இறையாகிய காதலரை காண இயலவில்லை என்றால் என் கண்களை கொன்றுவிடு என் நெஞ்சே. உறவுகொண்டவர் உறவு இல்லாது போனலும் கைவிடாமல் உறவு கொள்கிறாய் என் நெஞ்சே. தாகத்தை மறைத்து இன்பத்தை தவிர்க்கிறாய் என் நெஞ்சே. காமத்தை விட முடியுமா நாணத்தை விடு என் நெஞ்சே. பரிவற்று பிரிந்தவர் பின் செல்கிறாயே என் நெஞ்சே. உள்ளே இருக்கும் அவரை பேய் போல் பிடிக்க பார்க்கிறாயே நெஞ்சே.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.