திருவள்ளுவரின் திருக்குறள்

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.



காலையில் அரும்பாகி பகல் பொழுதில் வளர்ச்சி பெற்ற போது என மாறி மாலையில் முழுமையாக மலரும் இந்நோய்.



இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.



காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.



காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.


My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.


This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.



kaalai arumpip pakalellaam poadhaaki
maalai malarum-in noai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மாலையோ இல்லை மணமானவர்கள் உயிர் வாங்கும் வேலையோ எப்படி இருப்பினும் உன்னை வாழ்த்துகிறேன். உன் துணையும் என் துணை போன்று பிரிந்து கூடும் ஒன்றோ பனி போல் துளித்து அரும்புகிறதே. காதலர் இல்லாத பொழுது வரும் மாலை ஒரு கொலைகளத்து எதிலர் போல் இருக்கிறது. காலை பொழுதிற்கு நன்றியும் மாலை பொழுதிற்கு பகையும் ஆனாது எனோ?. மாலை தரும் துன்பம் அவருடன் இருந்த காலத்தில் அறியவில்லை. காலை அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும் இந்த காமநோய். போர்களத்து ஓசையாக இருக்கிறது இந்த மாலை. நிலவும் மயங்கி நிலை குலைகிறது மாலை பொழுதில். ஒயாத உயிரும் மாய்கிறது பொருள் தேடி சென்ற தலைவன் நினைவால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.