பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: கனவுநிலையுரைத்தல் / The Visions of the Night
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால் உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.
காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன். மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன். நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர். கனவில் என் காமம் நிறைவாகிறது. நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது. நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம். நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார். உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார். நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள். நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.