திருவள்ளுவரின் திருக்குறள்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.



நெஞ்சத்தை விடாது சென்றவரை கண்ணினால் காண மறையாது இருந்திடு நிலவே.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நினைத்தாலே இனிக்கும் தீராத இன்பம் தரும் காமம் மதுவிலும் மதிப்பானது. எப்படி பார்த்தாலும் நினைத்தாலே இன்பம் தருவது காமம். நினைப்பது போல் நினைக்க மறுப்பது தும்பல் தோன்றி நிற்றது போல் இருக்கும். என் நெஞ்சில் அவர் இருப்பது போல் நானும் அவர் நெஞ்சில் இருப்பேன். அவர் என்னை கடிந்து கொண்டாலும் என் நெஞ்சில் நிலைக்கிறார். உறவோடு இருக்கும் தருணம் தவிர மற்றபடி அவரது நினைப்பிலே இருக்கிறேன். மறந்தால் வாழ்வேனோ தெரியாது என்பதால் மறப்பதில்லை இருப்பினும் நினைப்பும் என் நெஞ்சை சுடுகிறது. நின்னத்துக் கொண்டே இருப்பதை வெறுக்காமல் இருப்பதே காதலர் சிறப்பு. உயிரே நீதான் என்றவர் அதன்படி இல்லை என்பதால் நினைப்பால் தவிக்கிறேன். நிலவே மறையாதே நெஞ்சில் இருக்கும் அவரை காண கண்கள் ஏங்குது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.