பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: தனிப்படர்மிகுதி / The Solitary Anguish
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
தன்னால் ஒருவரை வீழ்த்தி தானும் வீழ்ந்த நிலைப் பெற்றவரே பெற்றவர் காமத்தால் முழுவதும் சுவைக்கத் தகுந்தக் கனி.
தானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர். வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது. வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள். வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை. காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை. காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல். இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான். அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது. காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர். நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.