திருவள்ளுவரின் திருக்குறள்

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.



உள்ளம் போலவே நினைக்கும் இடம் செல்ல முடியும் என்றால் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்குமோ என் கண்.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மறைக்க முடியாதபடி ஊற்று நீராய் வெளிப்படுகிறது என் நோய். இதை உண்டாக்கிய அவரிடம் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. காமமும் வெட்கமுட் காவடிக் தண்டுபோல் இருந்து என்னை வேதனை அடையச் செய்கிறது. காமக்கடல் நீந்திட ஏதுவான கப்பல் இல்லை. நட்பாய் இருக்கும் பொழுதே வராத அவர் வெறுத்தால் என்ன செய்வாரோ. கடல் அளவு இன்பம் தரும் காமமே தடை உண்டானால் கடலைவிட துன்பம் தருகிறது. காமக் கடல் நீந்த முடியாமல் நள்ளிரவிலும் நான் தவிக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஓய்வு தந்த இரவு என்னை துணையாக விழுத்திருக்கச் செய்தது. கொடியவர்கள் செய்யும் கொடுமைவிட துணை இல்லா இந்த இரவு கொடுமையானது. உள்ளம் போல் நினைக்கும் இடம் எல்லாம் சொல்ல முடியும் என்றால் வேதனையான கண்ணீரில் மிதக்காது என் கண்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.