திருவள்ளுவரின் திருக்குறள்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.



அறிவுள்ளோர்க்கும் தேற்றிக் கொள்ளவது அரிதாக இருக்கிறது பிரிவு ஒரிடத்தில் உண்மையாகி விடுவதால்.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிரிந்து போகமாட்டாய் என்றால் என்னிடம் சொல் பிரிவதாக இருந்தால் அதை தாங்குபவர் இடத்தில் சொல். இன்பம் தந்த அதே கண் பிரிவை நினைத்து துன்பத்தை தருகிறது. அறிவு நிறைந்தவருக்கும் அரிது பிரிவு என்ற உண்மையை கண்டு தன்னை தேற்றிக்கொள்ள. அஞ்சாதே என்று ஆறுதல் சொல்லி பிரிந்தால் துன்பப்படுதல் தவறாகுமா?. பிரிவு உறவை முறிக்கும். பிரிய முடியும் என்றால் நன்மை செய்வது சாத்தியம் இல்லை. நடக்கும் செயல்களுக்கு அஞ்சி துறந்தவர் கைகளும் இறையை இறஞ்சும் என்றால் அது எப்படி உண்மையாகும். மாறுபட்ட மனிதர்களுடன் வாழ்வதை விட துன்பமானது இனிமையான துணையை பிரிந்து வாழ்வது. விலகி இருப்பதால் சுட்டெரிக்கும் காமத்தீயே தீயை விட கொடியது. அரிதான பிரிவை கடந்து அதன்பின் இனிதாக வாழ்பவரும் உண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.