திருவள்ளுவரின் திருக்குறள்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.



ஊரார் பழிச் சொல் உரமாக அன்னையின் சொல் நிராக நீண்டு வளர்கிறது காமம் என்ற இந்நோய்.



இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.



இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.



ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.


My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.


This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.



ooravar kavai eruvaaka annaisol
neeraaka neeLum-inh noai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பலர் பேசுவதால் காதல் வாழும் என ஆருயிர் அறிவது ஒரு பாக்கியம். இறை உணர்ந்தவன் என்பவனும் காதல் வசப்பட்டவன் என்பதால் உயிருக்கு இது இன்பம். மலர் போன்ற கண்ணின் அருமை அறியாமல் வதந்தி பேசும் இந்த ஊர். ஊரார் சொல்படி காதல் ஈடாகட்டும் அவர்களே காதலாகிய இறை பற்றை வளர்க்கும் தாய் போன்றவர்கள். மகிழ்ந்து இருக்க மது தேடுவது போல் காமம் தோன்ற இன்பம் உண்டாகிறது. சும்மா ஒரு நாள் பார்த்ததற்கு கிராணம் போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஊரார் பேச்சி எருவாக அம்மாவின் பேச்சி நீராக காதல் பயிர் வளரந்தது. நெய் கொண்டு நெருப்பை அணைப்பது போன்றது காதலை பழித்து அழிக்க நினைப்பது. வதந்திக்கு முற்றாய் பிரிவதை தவிர்த்தார். இவ்வூர் மக்கள் வதந்தியால் என் காதலர் என்னை வந்தடைந்தார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.