திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: நாணுத்துறவுரைத்தல் / The Abandonment of Reserve
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.