பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: நடுவு நிலைமை / Impartiality
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
சிறப்பு பொருந்தியவன் செயல்கள் வீணாகாமல் வளரும் சந்ததிக்கும் தனிச்சிறப்பு உடையதாய் இருக்கும்.
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity
seppam udaiyavan aakkanhj sidhaivindri
echchaththiR kaemaappu udaiththu
அவர் இவர் என்று பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே தக்கார் அதை அவரது ஏச்சமாகிப் போன உடல் காட்டிவிடும். கேடும் பெருக்கமும் நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.