பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: நலம்புனைந்துரைத்தல் / The Praise of her Beauty
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
குறைந்து நிறையும் நிலையற்ற நிலாவினைப் போல் மாறுபாடு உண்டோ மங்கை முகத்திற்கு.
காதலின் நலத்தை கூட்டி சொல்வதாக அமைந்த இந்த அதிகாரத்தில் அனிச்ச மலரின் மென்மையிலும் மென்மையான பெண் தன்னை வீழ்த்துகிறாள் என்றும், அவளது கண் மலர் பலர் கண்டு வியக்கும்படி உள்ளது என்றும், உடல் முறிந்துவிடும் முத்தமும் வெறி கூட்டும் வாசணையும் வேல் போன்ற கண்ணும் மூங்கில் போன்ற தோளும் அவளுக்கு என்றும், அவளின் கண் அழகால் குவளையும் தலை கவிழும் என்றும், ஓசை கேட்டு முறியும் கழுத்து என்றும், அவளின் முகமும் நிலவும் பார்த்த மீன் கலக்கம் அடைந்தது என்றும், நிலைவை போல் குறை பெண்ணுக்கு இல்லை என்றும், நிலவும் ஒளிவிட வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலவே என்றும், மலர்ந்த கண் போல் முழுமையாக தோன்று நிலவே என்றும், அனிச்சமுத் அன்னத்தின் இறகும் பெண்ணின் பாதத்திற்கு வலி உண்டாக்கும் என்றும் உரைக்கிறார்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.