பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: புணர்ச்சிமகிழ்தல் / Rejoicing in the Embrace
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
பிணிக்கு மருந்துகள் மாறுபட்டே இருக்கும் மெல்லியளாள் உண்டாக்கும் பிணிக்கு அவளே மருந்து.
கண்டு கேட்டு சுவைத்து முகர்ந்து தொட்டு கூடி மகிழ்தல் பெண் இடத்தில் மொத்தமாக உள்ளது. நோய் உண்டாக்கிய ஒன்றுக்கு வேறு ஒன்றே மருந்து பெண் இவளோ நோய் செய்து மருந்தாகவும் இருக்கிறாள். பெண்ணுடன் உறங்குதை போல் இனிமையான ஒன்று மாறும் இவ்வுலகில் இல்லை. விலகிச் சென்றால் சுட்டெரிக்கும் புதிய நெருப்பு பெண். அவள் தோள் வேண்டிய பொழுது இன்பம் தரும் என்பதால் அமுதுக்கு ஒப்பானது. இளம் பெண்ணுடன் இணைதல் தன் உழைப்பால் உண்ணும் உணவு போன்றது. காற்றும் இடை புகாத முயக்கம், சிறு பிணக்கு இவை காமத்தின் பயன்கள். அறியாமை அறிந்து அழித்துக் கொள்ளும் பிள்ளை போல் காமத் தொடர்பு செம்மையாக்கும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.