பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: குறிப்பறிதல் / Recognition of the Signs
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
எந்தவித உறவும் இல்லாதவர்கள் போல் பொதுவான பார்வை பார்ப்பது காதலர்கள் இடத்தில் உண்டு.
நோய் உண்டாக்கவும் அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ள இவளின் கண் மறைமுக நோக்கத்திற்கு சரிபாதியல்ல அதைவிட அதிகமானது. காதல் பயிர் வளக்கும் அவள் பார்வை நான் வானம் பார்க்கையில் என்மேலும் அவளை பார்க்கையில் மண் மேலும் இருக்கும். ஒரு கண் இமைத்து அவள் காதலை உணர்த்தினாள். அவளது சொல் உறவற்றதாக இருந்தாலும் என்னை விலகாமல் இருந்தது. விலகாத சொல்லும் விலகும் பார்வையும் புதிய குறிப்பாக இருந்தது. ஏதுமற்ற பொதுப்பார்வை காதலர் கண்ணுக்கு உண்டு. கண்ணும் கண்ணும் கலந்தால் வார்த்தைகள் பயன் அற்றுப் போகின்றது.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.