திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இரவச்சம் / The Dread of Mendicancy   

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.



இரந்து கேட்டல் என்ற பாதுகாப்பாற்ற தோணி மறைத்தல் என்ற கடின பாறையால் சிதைந்து விடும்.



இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.



வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.



இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.


The fragile bark of beggary
Wrecked on denial's rock will lie.


The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.



iravennum Emaappil thoaNi karavennum
paardhaakkap pakku vidum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை. கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால் கெட்டு ஒழியட்டும் உலகை படைத்தவன். வறுமையை துன்பத்தை அடுத்தவர் உதவியால் அழிக்க வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. கேட்டுப் பெறமல் உழைத்து உண்ணும் அரிசி குறைந்த கஞ்சி சிறப்பானது. கேட்பவரை அவமதிப்பவர் இடத்தில் கேட்க வேண்டாம். கொடுப்பவர் உள்ளம் மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். கொடுக்க மறுப்பவர் தன் உயிரை எப்படி காக்கமுடியும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.