திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நல்குரவு / Poverty

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.



இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும்.



வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.



இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.



வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.


From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow.


The misery of poverty brings in its train many (more) miseries.



nalkuravu ennum idumpaiyuL palkuraith
thunpangaL sendru padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வறுமையை விட கொடியது வறுமையே இது இன்று நாளை என எப்பொழுதும் வரும் வந்தால் சேர்த்த பொருளும் திட சிந்தனையும் கெடும். நற்குடியில் பிறந்தவரும் தன்நிலை இழக்கச் செய்யும் நல்குரவு வந்தால் தாயும் அந்நியமாக போவாள். நெருப்பிலும் தூங்கலாம் வறுமையில் சாத்தியம் இல்லை எனஙே நல்குரவு வராதபடி காக்கவேண்டும். தூய்மையற்ற துறவி உப்புக்கும் காடிக்கும் வழியின்றியே துறவை மேற்கொள்கிறான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.