திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உழவு / Farming   

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.



வழி ஏதும் இல்லை என்று அசைவின்றி சோம்பி இருப்பவரைக் கண்டு நிலம் என்ற நல்லாள் ஏளனம் செய்வாள்.



எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.



நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.



வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.


The earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty.


The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.



ilamendru asaii iruppaaraik kaaNin
nilamennum nallaaL nakum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பலவகை மாற்றங்களுடன் உலகம் சுற்றினாலும் உழவே தலைமையானது அதுவே உலக இயக்கத்திற்கு மூலமானது. உழவே உலகின் ஆணி எனவே அவரை தொழுது உண்பதே மற்றவர் பணி. பலகுடையும் பணியும் உழவே இல்லை என்றால் துறவியும் வீணே. ஏர் விடுதலை விட சிறந்தது எரு இடுதல், நீர் பாய்ச்சுவதை விட சிறந்தது பாதுகாப்பது. கவனியாத மனைவியின் ஊடல் போல் நிலமகளும் செய்வாள். சோம்பேறியை நிலமகள் கண்டு வெட்கப்படுவாள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.