திருவள்ளுவரின் திருக்குறள்

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.



துன்பத் தாக்கத்தால் அழிந்து வீழும் துன்பத்தைக் கடந்துச் செயல்பட்டுக் காக்கும் நல்ல ஒருவர் இல்லாத குடும்பம்.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்பட துணியும் கைகளைப் போல் சிறந்தது இல்லை. செயல்திறனும் சிந்தனை திறனும் இணைந்தே வாழ்வை வளமாக்கும். குடி சிறக்க நினைப்பவற்கே தெய்வமும் முன்வந்து உதவும், தானாக நல்முடிவு வரும், உறவுகளும் சூழும். நல்லாண்மை என்ற சிறந்த மனித ஆற்றல் என்பது வாழ்வை வறுமை அற்றதாக மாற்றுவது. போர்களத்தில் போராடும் வீரரைப் போல் கவனமுடன் வாழ்வு சிறக்க செயல்பட வேண்டும். வாழ்வு சிறக்க ஏற்ற பருவம் என்று இல்லை தொடர் முயற்சியே வாழ்வை வளமாக்கும். துன்பத்திற்கு துன்பம் தரும் கொள்கலன் உழைக்கும் ஒருவரின் உடம்பு ஆகும். இக்கட்டான சுழலில் சிக்குண்டு அழியும் அதைக் காக்கும் நல்லாள் இல்லாத குடி.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.