திருவள்ளுவரின் திருக்குறள்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.



பயன் கருதி செய்யாமல் செய்த உதவியை எண்ணிப் பார்பத்தின் நன்மை கடலை விட பெரியது.



இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.



இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.



என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.


Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea


If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea



payan-thookkaar seydha udhavi nayan-thookkin
nanmai kadalin peridhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும் வட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தை விட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்பதே நமக்கு நல்லது. பெற்ற உதவியை மறப்பவர் உய்வு அடைய முடியாது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.