பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: நாணுடைமை / Shame
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
அடுத்தவற்கு எற்படும் பழி, தனக்கு எற்படும் பழி என இரண்டிற்கும் நாணும் ஒருவரை ஒத்திசையும் தலைவன் என உலகம் போற்றும்.
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.
As home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own.
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.
piRarpazhiyum thampazhiyum naaNuvaar naaNukku
uRaipadhi ennum ulagu
செய்யப்படும் செயல்களைக் கொண்டு நாணுவதும் பெண் நாணுவதும் வெவ்வெறு தன்மை உடையது. உயிர் மீது பற்றும் உடல் அழுக்கை அகற்றுவதும் எல்லா உயிர்களுக்கும் சமம் மனிதனுக்கு மட்டுமே நாணுதல் எனும் சிறப்புள்ளது. நாணமே முன்னோடிக்கு அணி, தற்காப்பு கவசம். நாணம் உள்ளவர்கள் உயிரை துறக்க தயங்குவது இல்லை. நாணம் அற்றவர்களை அறம் காப்பதில்லை. நாணம் இல்லாதவர் மரப் பொம்மை போன்றவர்..
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.