பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: நன்றியில்செல்வம் / Wealth without Benefaction
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
மிச்சமாக இருக்கப் போவது ஏது என அறிவனோ? ஒருவராலும் விரும்பப்படாதவன்.
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.
echchamendru en-eNNunG kolloa oruvaraal
nachchap padaaa thavan
சொல்லமுடிய பொருள் சேர்த்து அனுபவிக்காமல் இறந்தால் என்ன பயன், அதை தகுதியானவற்கு கொடுக்காதவர் பிறவித்துன்பம் அடைவார். பொருள் சேர்க்கும் பண்பை கடந்து பிறவற்றின் மீது ஆர்வம் இல்லாதவர் பூமிக்கு பாரமானவரே. கொடுப்பது தூய்ப்பது என செய்யாத பொருள் வீணே. பயனற்ற செல்வம் பழான மரம் ஊர் நடுவே இருப்பதை போன்றது. அறமற்று சேர்த்த செல்வம் அடுத்தவரே அனுபவிக்க ஏதுவானது. சீரான செல்வருக்கு வரும் துன்பம் மாழைக்கான கார் இருள் போல் வந்து நன்மை பயக்கும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.