திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: இனியவைகூறல் / The Utterance of Pleasant Words
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.