39. துஞ்சலே நிலை பேறாகுந் துயில் சோம்பு சாவுமாகும்
பஞ்சரஞ் செருந்தி கூடாம் பரதரே கழியர் நாய்கர்
கஞ்சமே தாளங் குல்லை கமல வெண்கலம் வட்டப்பம்
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே.
40. நெஞ்சென்ப மன மார்பின்பேர் நிழல் செல்வங் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முது கிவ்வைந்தே
வஞ்சி மேற்செல வோரூர் பா வல்லி மென்மருங்குற் பெண்ணாம்
தஞ்சமே எளிமை யென்ப தரு பற்றுக்கோடுமாமே.
41. அஞ்சனங் கறுப்பு மை திக்கானையி லொன்று முப்பேர்
மஞ்சரியே பூங்கெத்து மாலை செந்தளிருமாகும்
அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப
இஞ்சியே புரிசை யிஞ்சி யெறுழென்ப வலி தண்டாமே.
42. கிஞ்சுக முருக்குச் செம்மை கிருட்டினன்தான் மால் பார்த்தன்
கஞ்சமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே
பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழி யம்பிதன் குதைப்பேர்
வஞ்சனை மாயை பொய்யா மாயன் மால் கருநிறத்தோன்.
43. குஞ்சியாண் மயிர் புட் பார்ப்புக் குன்றியின் கொடிமுப்பேரே
வஞ்சமே கபடம் வாளா மாயம் வஞ்சனை பொய் யென்ப
கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தான் அழுக்குக் குற்றம்
கஞ்சிகை சிவிகை யாடை கட்டிடு திரையுமாமே.
ஞகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial