மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » ஙகரயெதுகை


« ககரவெதுகை 
சகரயெதுகை » 


21.  புங்கமே யுயர்ச்சி யம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே
திங்க ளம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன்
கங்கென்ப வரம்பின் பக்கங் கருந்தினை பருந்து மாமே
தொங்கலே பீலிக்குஞ்சந் தூக்கொடு தொடுத்த மாலை.

22.  சங்கமே கணைக்கா லோரெண் சபை சங்கு புலவர் நெற்றி
பங்கென்ப முடமேயாகும் பாதியுஞ் சனியு மேற்கும்
வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயமாமே
அங்கணஞ் சேறு முற்றம் ஆஞ் சலதாரேக்கும் பேர்.

23.  ஞாங்கர் வேல் பக்க முன்பு மேலென நான்குமாகும்
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல்
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வையென்ப கூர்மை வைக்கோல்
வேங்கைபொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூப்புள் சாவாம்.

24.  மங்குல் காரிருள் விண் முப்பேர் மருந் தமுதொடு மருந்தாம்
பங்கியே பிறமயிற்கும் பகருமாண் மயிற்கும் பேராம்
அங்கதம் பன்னகந் தோள் அணியுடன் வசைச் சொல்லாகும்
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே.

25.  அங்கமே யுடலுறுப் பென் பாறங்கங் கட்டி லைம்பேர்
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசலாகும்
பொங்கரே மரத்தின் கோடு பொருப் புய ரிலவு முப்பேர்
பொங்கலே கொதித்தல் மிக்காம் பொச்சாப்பு மறவி தீதாம்.


« ககரவெதுகை 
சகரயெதுகை » 


Meta Information:
ஙகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial