மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » ழகரயெதுகை


« வகரவெதுகை 
ளகரயெதுகை » 


248.  விழவென்ப மிதுன ராசி விளங்கு முற்சவமு மாகும்
கழையென்ப புனர்தம் மூங்கில் கரும்பென விரும்பு முப்பேர்
கழல் கழங்கொடு செருப்புக் காலணி காலந் நாற்பேர்
கிழமை மூப் புரிமை பண்பாங் கிழி நிதிப்பொதி கீறாமே.

249.  சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும்
பாழியே வலி விலங்கின் படுக்கை யூர் பற்றிலாரூர்
நாழியே யளக்கு நாழி நாழிகை பூரட்டாதி
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம்.

250.  இழு மெனலோசையென்ப இனிமை யுமியம்பு மப்பேர்
விழுமமே சிறப்பு சீர்மை யிடும்பையும் விதித்த பேரே
தொழுவென்ப துழலை தானே யிரேவதி நாளுஞ் சொல்லும்
செழுமையே வளங் கொழுப்பாந் தேனென்ப நறவும் வண்டும்.

251.  கழுது பேய் பரண் வண்டென்ப கயவு கீழ் பெருமை மென்மை
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே யிரங்கல் கேடாம்
கழுமல் பற்றொடு மயக்கங் காதலே ஆசை கோறல்
கழிலென்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர்.

252.  மாழை பொன்னு லோகக் கட்டி மடமை யோர் புளிமா வோலை
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம்படையுறுப்பாம்
தாழை கேதகை தெங்காகுஞ் சாகினி சேம்பு கீரை
ஊழ் முறை வெயில் பகைப்போ ஊசியே சூசி யாணி.

253.  உழையென்ப திடமான் யாழி னோர் நரம்பிற்கும் பேராம்
குழை யென்ப தளிர் துவாரங் குண்டலஞ் சேறு நாற்பேர்
விழைவென்ப புணர்ச்சி காதல் வெறுக்கை யென்பது பொன் செல்வம்
வழி மர பிடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை யுலாவல்

254.  ஈழம் பொன் கள் ளோர்தேசம் எல்லையே அளவை வெய்யோன்
மேழகங் கவசம்ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை
காழியர் வண்ணா ருப்புவாணிகர் இருபேர் காட்டும்
வேழமே கரும்பி யானை கொறுக்கைச் சிவேணு நாற்பேர்.

255.  கூழென்ப துணவும்பொன்னும் பயிரென்று கூறுமுப்பேர்
காழென்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம்
யாழென்ப மிதுனம் வீணை யிரலைநா ளாதிரைப் பேர்
கீழென்ப திடங் கீழ்சாதி கீழ் திசை கயமை நாற்பேர்.

256.  கோழியே குரு கோரூராங் குய்யமே மறைவு யோனி
மூழியே வாவி சேறோ டகப்பையு மொழியு முப்பேர்
மூழையே யகப்பை சோறா முறஞ் சுளகொடு விசாகம்
நூழிலே கோறல் யானை நுண்கொடிக்கொத்தான் பேர்.

257.  தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிறை யடிமைக்கூட்டம்
கெழுவுதல் மயக்கம் பற்றாங் கீலாலங் கறை நீர் காடி
குழ றுளையுடைப்பொருட் பேர் மயி ரிசைக்குழன் முப்பேரே
அழிவென்ப வீதல் கேடாம் அவி நெய் சோ றமரருண்டி.


« வகரவெதுகை 
ளகரயெதுகை » 


Meta Information:
ழகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial