மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » வகரவெதுகை


« லகரவெதுகை 
ழகரயெதுகை » 


230.  நவமென்ப புதுமை கேண்மை யொன்பது நற்கார்காலம்
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம்
உவணமே கலுழனாகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும்பேர்
பவணமே யிராசி பூமி படர்காற்று மனையே கோயில்.

231.  புவன நீர் புவிய மாகும் புரத்தலே காத்தல் வன்மை
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமுந் தந்தும்
தவவென்வ மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர்
சிவ நன்மை குறுணி முத்தே சீவனே யுயிர் வியாழன்.

232.  இவறலே மறவி யாசையென்ப பேரிச்சைக்கும் பேர்
இவர்தலே யெழுச்சி யாசை யேறுதல் சேரல் மேவல்
சுவவென்ப புள்ளின்மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்டனும் பேர்
குவவென்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர்.

233.  தவிசென்ப தடுக்கு மெத்தை யிலகட முப்பேர் தானே
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி
நவிரமே மஞ்ஞை புன்மை நன்மலையுடனே யுச்சி
நவிலல் சொல்லுதல் பண்ணற்பேர் நவியமே மழு கோடாலி.

234.  கவுசிகம் விளக்குத்தண் டோர்பண் பட்டுக் கடியகோட்டான்
சவுரியே திருமால் கள்வன் சனி யம னினைய நாற்பேர்
மவுலியே முடி கோடீரம் வட்கலென்பது நாண் கேடாம்
கவலை செந்தினையோர்வல்லி கவர்வழி துன்ப நாற்பேர்.

235.  சேவகம் வீரம் யானைதுயிலிடந் துயிலுஞ் செப்பும்
சீவணியோர் மருந்து செவ்வழித்திறத்தோரோசை
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர்.
நீவியே துடைத்த லாடை நெருங்கு கொய்சக முப்பேரே.

236.  உவளக மதி லோர்பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில்
கவடென்ப கப்பி யானைக்கழுத்திடுபுரசைக்கும் பேர்
சிவை யுமை மரவேர் கொல்லனுலைமுகந் திரியும்ஓரி
கவையே ஆயிலியங் காடு கவர்வழி எள்ளிலங்காய்.

237.  சிவப்பென்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர்
உவப்பென்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி யாசாரம்
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலு மொலியுஞ் செப்பும்
துவக்கே தோல் பிணக்கிரண்டாஞ் சூழலே யிடம் விசாரம்.

238.  சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே
கேவலந் தனிமை முத்தி கீரமென்பது பால் கிள்ளை
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே
வாவலுஞ் சலிகைப்புள்ளுந் தாவலும் வகுக்கலாமே.

239.  சுவல் பிடர் தோண்மேன் மேடு துரகதக் குசை நாற்பேரே
கவி மந்தி புலவன் சுங்கன் கழி யென்ப மிகுதி காயல்
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரங் கலப்பை
கவிகையே குடை கொடைப்பேர் கடிப்பங் காதணி பூண் செப்பாம்.

240.  மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல்
காவுறுவிலங்கு செல்வங் கருநிறங் கமலை பத்தாம்
கோ விழி பசு நீர் திக்குக் குலிசம் விண் கிரணம் பூமி
ஏ வுரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற் பீரேழாமே.

241.  ஆவியே வாவி நாற்றம் ஆருயிர் புகை மூச்சைம்பேர்
கூவிரந் தேர் தேர்மொட்டாந் குவடு நீண்மலை வெற்புச்சி
காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளு முப்பேர்
நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளுமாமே.

242.  ஆவென்ப திரக்கம் பெற்றம் ஆச்சாவோ டிசை வியப்பாம்
காவென்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோட்சுமை நாற்பேரே
பாவென்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பு மாகும்
தாவென்ப பகை வருத்தந் தாண்டுதல் வலி கே டைம்பேர்.

243.  கவ்வையே பழிச்சொல் துன்பங்கள் ளொலி யெள்ளிலங்காய்
பவ்வமே குமிழி வாரி பருமரக்கணு உவாவாம்
தவ்வை முன்பிறந்தாளொடு தாயு மூதேவியும் பேர்
நவ்வியே தோணி மானா நன் றென்ப பெருமை நன்மை.

244.  அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை யாகு முப்பேர்
செவிலியே வளர்த்தகைத்தாய் முன்பிறந்தவளுஞ் செப்பும்
கவுட மோர்கொடி யோர்தேச மிருபெயர் கழறலாமே
சுவடு வச்சிராங்கி யோரெண் சுபமென்ப தழகு வெண்மை.

245.  பவமென்ப சனனம் பாவம் பாவந்தான் வினை தியானம்
சவுரியங் களவு வீரந் தண்மை தான் குளிச்சி தாழ்வு
யவமொரு தானியப் பேரென்ப நெல்லிற்கு மப்பேர்
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திர காரர் ரென்ப.

246.  ஆவரணந்தான் சட்டை தடை மறைப் பாரணம் ஆடை
ஏவலே வியங்கோளென்ப எய்திய வருமைக்கும் பேர்
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரக்காரரும் பேர்
ஓ விரக்கச்சொல் நீக்கமோடு நீர்தகை கபாடம்.

247.  அவ்வையே தாயின் பேருமௌவையோ டிருபேராமே
செவ்வி யேர் பொழுதினோடு செப்பிய பருவ மாகும்
தெவ் வமர் பகை யிரண்டாந் தீவினை கொடுமை பாவம்
சைவமோர் புராண மீசன் சமயத்தின் விகற்பமாமே.


« லகரவெதுகை 
ழகரயெதுகை » 


Meta Information:
வகரவெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial