133. உப்பு மெல்லியலா ராடல் உவர் கடல் இனிமை நாற்பேர்
செப்பமே நடுநிலைப்பேர் தெருவொடு நெஞ்சுமாகும்
துப் பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை யனுபவப் பேர்
கப்பண மிரும்பிற்செய்த நெருஞ்சின்முட் கைவேலாமே.
134. தாபரம் மலைபோல் நிற்றல் சடமொடு தருவு முப்பேர்
நீப முத்தரட்டாதிப் பேர் நிமித்த நீர்க் கடம்பு மாகும்
யூபமே கவந்தம் வேள்விகுறு தம்பம் படைவகுப்பாம்
சாபமே சபித்தல் வில்லாந் தளிமமே யழகு மெத்தை .
135. சீப்பென்ப கதவிற் றாழும் சீவு கங்கமுமா மென்ப
நாப்ப ணென்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்வுறுப்பு முப்பேர்
காப்பென்ப காவலோடு கதவும் வெண்ணீருமாகும்
யாபென்ப கவிதை காட்டாம் இறால் தேன்கூ டெருது மீனே.
பகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial