சிவன் எங்கும் பரந்தும் விரிந்தும் உள்ளதாக பெரியோர்களின் கூற்று. அவன் நம்முள்ளும் உள்ளான் என்பது உணர்வாளர்களுக்கு புரியும். குலம் என்பது நம்முடைய மூதாதையர்களின் வழிதோன்றல்களாக உள்ள கருத்து. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஒரே சாதியுள் பல குலம் இருக்கிறது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குலதெய்வம் இருக்கிறது. ஒரே ஊரிலுள்ள ஒரே சாதியில் பல குலதெய்வம் இருக்கிறது. தாத்தா இறந்தாலும் தாத்தாவின் மகன் வழி பேரனுக்கு இக்குலதெய்வம் மாறாது. தாத்தாவின் மகள் வேறு குடும்பத்திற்க்கு செல்லும்பொழுது குலதெய்வம் மாறிவிடும். […]
Month: November 2021
சித்தன் போக்கு சிவன் போக்கு
காடு மலைகளில் பைத்தியம் போல திரிபவன் சித்தன் என பெரும்பாலும் நம்புகிறோம்.ஆனால் அவ்வாரில்லை. சிவனின் ரூபமாக நமது உடலில் சீவன் உள்ளது. எல்லா உயிர்களிலும் உள்ளது. சீவனை பற்றி தெரிந்து கொள்ள மூச்சு காற்றின் வேகத்தை தடுத்து மனதை வசப்படுத்தி இறைவனின் நினைப்பிலே இருக்க வேண்டும். சித்தனின் போக்கு சிவனை அறிந்துகொள்ளவோ அல்லது இணைந்துகொள்ளவோ துடிக்கும். அதனால் தான் சித்தன் போக்கு சிவன் போக்கு. மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். -சசிகுமார் சின்னராஜு