நந்தி என்பது நல்ல மனதை குறிக்க கூடிய வடிவம். நல்ல மனம் என்பது எப்பொழுதும் இறைவனை பற்றி யோசிப்பது இறைவனை அடைய துடிப்பது போன்றதாகும். லிங்கம் என்பது ஒரு விதமான உணர்வு. நம் மனம் எப்பொழுதும் லிங்கத்தை பார்த்தப்படி இருந்தால் இறைவனை உணர்ந்துவிடலாம் என்பதற்க்காகத்தான் கோயிலில் லிங்கத்தின் முன்பு நந்தியை வைத்துள்ளனர். இருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒருவர் குறுக்கே வந்து தடை செய்தால் “நந்திக்கு குறுக்கே வராதே” என கேட்டிருப்போம். கோயில்களில் பிரதோச நாட்களில் நந்தியின் […]
Category: ஆன்மீகம்
இமயமலை
இமயமலைக்கு சென்று வர வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இந்தியாவில் வசிக்கும் ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு இருக்கும். இமயமலையில் பாபா போன்ற சித்தர்கள் ஞானிகள் சூச்சம தேகத்தில் நடமாடுகிறார்கள் என கருத்து நிலவுகிறது. அதனால் ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் பலர் அங்கே சென்றால் அமைதி முக்தி கிடைக்கும் என நம்புகின்றனர். பலர் அங்கு சென்று பார்த்து திரும்புகின்றனர், சிலர் அங்கே தங்கி விடுகின்றனர். ஆன்மீகத்தில் சொல்லுகிற இமயமலை இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள இமயமலை என்ற நிலப்பகுதி என நம்பிக் கொண்டிருக்கிறோம். […]
திருநீறு விபூதி
கோயிலுக்கு சென்று பூஜை முடிந்ததும் கோயில் பூசாரி விபூதி குங்குமம் பிரசாதமாக வழங்குவார். குங்குமம் வைக்கும் இடம் கூட உணர்வாக பல நேரம் வெளிப்படுகிறது. விபூதியை உணர்வு தெரிகிற நெற்றியில் வைத்தால் கூட பரவாயில்லை, பல இடங்களில் வைப்பதால் விபூதிக்கு அர்த்தம் தெரியாமல் பல வருடம் முன்பு யாம் தேடலை தொடங்கினேன். அந்த விபூதியை பற்றி இங்கு பார்ப்போம். எனக்கே விபூதி அடிக்கிறியா என வசனத்தை நாம் கேட்டிருப்போம். மற்றவர் நமக்கு மொட்டை அடிப்பது. அதாவது நம்மிடம் […]
சித்தன் போக்கு சிவன் போக்கு
காடு மலைகளில் பைத்தியம் போல திரிபவன் சித்தன் என பெரும்பாலும் நம்புகிறோம்.ஆனால் அவ்வாரில்லை. சிவனின் ரூபமாக நமது உடலில் சீவன் உள்ளது. எல்லா உயிர்களிலும் உள்ளது. சீவனை பற்றி தெரிந்து கொள்ள மூச்சு காற்றின் வேகத்தை தடுத்து மனதை வசப்படுத்தி இறைவனின் நினைப்பிலே இருக்க வேண்டும். சித்தனின் போக்கு சிவனை அறிந்துகொள்ளவோ அல்லது இணைந்துகொள்ளவோ துடிக்கும். அதனால் தான் சித்தன் போக்கு சிவன் போக்கு. மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். -சசிகுமார் சின்னராஜு
ஆமை புகுந்த வீடு விளங்காது
ஆமை புகுந்தால் எப்படி வீடு விளங்காமல் போகும் என இப்பதிவில் பார்ப்போம். “ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முக்தியடி குதம்பாய்” என குதம்பை சித்தர் ஆமையை புகழ்ந்துள்ளார். “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து” என திருவள்ளுவர் ஆமையை புகழ்ந்துள்ளார். “ஆமை வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?” என பத்ரகிரியார் ஆமையை புகழ்ந்துள்ளார். ஆமை தான் விஷ்னுவின் இரண்டாவது அவதாரம். அதாவது மனிதன் கருவில் மீனிலிருந்து ஆமையின் குணத்தை […]
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
இப்பழமொழியை கேட்கும் பொழுது நமக்கு தவறான கோனத்தில் புரியலாம். அடித்தால் திருந்துவான், அடித்தால் தான் படிப்பான் என்று நமக்கு வன்முறை தூண்டும் விதமாக இருக்கலாம். ஆனால் அப்படி இல்லை. இறைவனின் திருவடியை பற்றினால் இறைவன் நன்மையை தருவது போல் அண்ணன் தம்பி கூட உதவி புரியமாட்டார்கள் என்று அர்த்தம். திருவடி என்பது என்ன? இறைவன் கால் பாதமா! கால் என்பது காற்றை குறிப்பது. காற்றை பிடித்து கனலை எழுப்பினால் எண்ணங்கள் குறைந்து மனம் நிறைவு பெறும். அண்ணன் […]
தீபாவளி
காமம், கோபம், பொறாமை, டம்பம், வஞ்சம் போன்ற நரக வேதனை தருவது அசுரர் எனப்படும். இதைத்தான் நரகாசுரன் என்கிறோம். வளி என்பது காற்று. நமது உடலில் தீபம் உள்ளது. அஃது சரியான முறையில் ஏற்றாமல் அல்லது வெளிச்சமில்லாமல் உள்ளது. காற்றைக்கொண்டு கனலை(வெளிச்சத்தை) ஏற்ற வல்லவர்களுக்கு நரக வேதனை தரும் அசுர குணம் அழிக்கப்பட்டு இறைவன் அருளை பெறமுடியும். அதன் காரணமாக தீபாவளி கொண்டாடுகிறோம். எண்ணை தேய்த்து குளித்து உடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுபோல மனதிலுள்ள அழுக்குககளையும் வெளியேற்றினால் மிகவும் […]
சிற்றின்பம் பேரின்பம்
பூ மூக்கிற்க்கு இன்பம் கொடுக்கும். இசை காதுக்கு இன்பம். ஸ்பரிசம் தோலுக்கு இன்பம், அழகான ஒன்றை பார்த்தால் கண்ணுக்கு இன்பம், சுவை நாக்கிற்க்கு இன்பம். உணவில் வரும் வாசனை மூக்கிற்க்கும் இன்பம் கொடுக்கும். சிலது மூன்று உணர்வுக்கும் இன்பம் அளிக்கும். ஐந்து புலணுக்கும் இன்பம் அளிக்க கூடிய ஒன்று என்றால் அது ஆணும் பெண்ணும் இணையும் காமம். அப்படிப்பட்ட காமத்தை ரொம்ப நேரம் அனுபவிக்க முடியாது. மனம் சோர்வு அடையவில்லை என்றாலும் உடல் சோர்ந்து விடும். இப்படிப்பட்ட […]
உருவமா அருவமா
இறைவனுக்கு உருவம் தேவையா அல்லது தேவையில்லையா! இறைவனை உணர்ந்தவர்கள் நமக்கு புரியவைப்பதற்க்காக பல முறைகளை கையாண்டுள்ளனர். எல்லோரும் இறைவனை உணரமுடிவதில்லை. அத்தி பூத்தாற் போல் அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கிறது. அதனால் புராணம், இதிகாசம், கோயில், சடங்கு, சாதி, மதம், தொழில் போன்ற எண்ணெற்ற துறைகளிலும் இறைவனை பற்றி பதிவு செய்துள்ளனர். குழந்தைகளால் நிச்சயமாக அருவ நிலையை வணங்க முடியாது. அவர்களுக்காக ஏற்படுத்திய முறை தான் கோயில். கோயிலில் பல தத்துவங்களை மறைத்துவைத்துள்ளனர். பலரால் உருவத்தை மட்டும் தான் […]
பித்ருதோசம்
அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். பிண்டம் கரைகிற மாதிரி நாமும் கரைந்துவிடும் என்ற உண்மை பலருக்கு தெரியாது. இறைவனை தேடும் முயற்ச்சியில் அக்னியில் நிற்கும் நிலை உருவாகும். அக்னியில் நிற்கும் பொழுது மனம் தூய்மை அடைகிறது. அக்னி என்பது குண்டத்தில் விறகு, நெய் போட்டு எரிப்பதல்ல. அக்னி வேறு நெருப்பு வேறு. தம்முடைய அசுத்தத்தை நீக்கவே சீதை அக்னியில் இறங்கினாள். கங்கையில் நீராடினால் நாம் புனிதமாவோம் என்பது முன்னோர் வாக்கு. […]
திருஇடம் – திராவிடம்
திரு + இடம் மாறி திராவிடம் ஆனது என்று தொல்காப்பிய சிந்தனையாளர் பதிவிலுள்ள புலவர் இரா.இளங்குமரனார் உரையில் கேட்டேன். Source : https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg திரு என்றால் உயர்ந்த, மேன்மையுள்ள என்று பொருள். திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை போன்று பல பிரபலமான ஊர்கள் இருக்கிறது. திரு இடம் என்றால் குருவின் பார்வையில் கல்வி கற்கும் இடம் தான். அந்தனர்கள் உள்ள இடம். அந்தம் என்றால் முடிவு. முடிவை அறிந்தவர், இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள். அந்தனர்களை […]
உயிர் வேறு இறை வேறு
இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்பது முன்னோர் வாக்கு. உயிர் தான் இறைவன் என்றால் ஏன் மற்ற கிரகங்களில் உயிர் இல்லை. ஏன் விசமாக்கும் இடத்தில் உயிர் வாழ முடியவில்லை. அப்பொழுது உயிரும் இறைவனும் வெவ்வேறு போல. எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் உயிரிலும் கலந்து இருக்கிறான் என்று சொல்லலாம். உயிர் தான் இறைவன் என்று சொல்லத்தகுமோ! சிந்தனை செய்வோம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். –சசிகுமார் சின்னராஜு
சாதியின் அர்த்தங்கள்
நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன். முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர். தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த […]
மதுவை / குடிபோதையை நிறுத்த முடியுமா?
மது குடிப்பவர்களிடம் கேட்ட போது எனக்கு சந்தோசம் குறைவாக உள்ளது அதனால் குடிக்கிறேன். காலை முதல் மாலை வரை வேலை செய்ததால் உடல் வலி ஏற்படுகிறது, தூக்கம் வரவில்லை அதனால் குடிக்கிறேன். மனம் பாரமாக இருக்கிறது அதனால் குடிக்கிறேன். குடியினால் ஏற்படும் போதை எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் பதிலை சொல்கிறார்கள். நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு […]
கார்த்திகை தீபம்
கார்த்திகை மாதம் பௌவர்னமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் சேரும் பொழுது மக்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர். பிரமனும் விஷ்னுவும் யார் பெரியவர் என்று போர் செய்யும் பொழுது சிவன் ருத்ரனாக மாறி சோதிப்பிழம்பாக தோண்றினார். அதை பார்த்து இருவருக்கும் அகங்காரம் குறைந்து சோதியை வணங்கினர். இச்சோதியின் மகிமையை தெரிந்து கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறோம். பஞ்ச பூதங்களில் அக்னி அல்லது நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. சிவனின் அக்னி வடிவத்தை திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. […]